சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர்.

இதற்கிடையே, அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக – பாமக இடையே இன்று இரவு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ.க. சார்பில் உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் கிஷண் ரெட்டி, மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *