மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி கண்காணிப்பாளர்களின் அகில இந்திய சங்கம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்னஞ்சல் செய்துள்ளது 1. கரோனா வைரஸ் எதிர்கொள்வதில் உலகத்திற்கு வழிகாட்டும் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு நன்றி
2 வரும் இரண்டு வாரங்களில் கருணா வைரஸால் நோய் பரவாமல் இருக்க அத்தியாவசிய அரசுப்பணிகள் தவிர மற்ற அலுவலகங்களை மூட வேண்டும்.
3. இதன்மூலம் பொது வாகனங்கள் மூலம் மக்கள் பயணிப்பதும் பொது இடங்களில் கூடுவதும் தவிர்க்கப்படும் அதுவும் தவிர பள்ளி கல்லூரிகள் விடுமுறை காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் பெரியோரையும் பார்த்துக்கொள்ளவும் பராமரிக்கவும் அரசு ஊழியர்கள் வீடுகளில் இருக்க வேண்டியுள்ளது
4. கட்டாயம் திறந்து வைக்கப்பட வேண்டிய அரசு அலுவலகங்களில் தேவையான சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
5. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு இணங்க சளி காய்ச்சல் உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்க வேண்டும் என்பதால் மருத்துவரின் சான்றிதழ் இல்லாமல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
6. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வரிகளை கட்டவும் கடன் தவணைகளை திருப்பிக் கொடுக்கவும் ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை கெடு தளர்த்த படவேண்டும்.
7. அலுவலகங்கள் இன்றியமையாதது இயங்க வேண்டிய நேரத்தில் வீட்டிலிருந்தே இயங்குதல் குறைந்த ஊழியர்களோடு இயங்குதல் காணொளி மூலம் கூட்டங்கள் நடத்துதல் போன்றவை கை கொள்ளப்படவேண்டும்.
8. பள்ளி கல்லூரிகள் விடுமுறை காரணமாக பொதுத்தேர்வு அல்லாத மற்ற தேர்வுகள் இந்த கல்வி ஆண்டில் ரத்து செய்ய வேண்டும்
9. அத்தியாவசிய துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு தகுந்த மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. மணிமோகன் அவர்கள் பிரதமருக்கு மனு அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *