தமிழ் பயிற்றுமொழி மாநாடு புதுச்சேரி


தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மடம் கிராமத்தில் வசிக்கும் வேளாண் ஆராய்ச்சியாளர் முனைவர். இரா. வினோத் அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டது. புதுடெல்லி வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் தமிழ் பயிற்றுமொழி மாநாடு பாண்டிச்சேரியில் உள்ள தனியார் உணவு அரங்கத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டினை தெலுங்கானா மேதகு ஆளுநர் மற்றும் புதுவை துணைநிலை ஆளுநர் டாக்டர். திருமதி .தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த ஆண்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளம் அறிவியல் மற்றும் தோட்டக்கலை இளம் அறிவியல் ஆகியவை தமிழ் மொழியில் கற்பிக்கப்படுகிறது அதனை போற்றும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றிக் கூறும் போது ,பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தாய்ப்பால் புகட்டுவது எவ்வளவு அவசியமோ அதுபோல ,தாய் மொழியில் கற்பதும் மிக சிறப்பாக அமையும். பிறமொழிகளில் கற்பதை விட தாய் மொழி பயில்வது மிக சிறப்பாக அமையும். பல துறைகளில் சாதித்த அறிஞர்கள் தாய்மொழியில் கற்றவர்களாகவே உள்ளனர். தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதனால் புதிய கல்வி கொள்கையை வரவேற்கிறோம். தமிழ் முதலில் வீடுகளில் தவள வேண்டும், நம் பிள்ளைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும் என்று அவர் கூறினார். அதனையடுத்து.

https://youtu.be/VbuimHOiTKc
தமிழ் பயிற்றுமொழி மாநாடு புதுச்சேரி
SHARE |SUBSCRIBE
UKTV Tamil online

இவ்விழாவில் தமிழ் ஆய்வியல் அறிஞர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள குமுளூர் வேளாண் கல்வி நிறுவனத்தில் உதவி பயிற்றுநராக பணிபுரியும் முனைவர் இரா வினோத் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியர் விருதினை மேதகு ஆளுநர் டாக்டர். திருமதி . தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். நீ. குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். க. ந. செல்வகுமார், தமிழ்நாடு டாக்டர். ஜெ .ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். கோ. சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார் .தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் கு. இராமசாமி, மா சா சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை அறிவியலாளர் முனைவர் நா. பரசுராமன், வேளாண் அறிவியல் தமிழ் இயக்க நிறுவனர் முனைவர்.மு.முத்தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் இவ்விழாவில் காணொளி மூலமாக 500கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *