சென்னை புத்தகக் காட்சியின் முதல் நாள் நிகழ்வு


சென்னை புத்தகக் காட்சியின் முதல் நாள் நிகழ்வு

செய்திக் குறிப்பு, 24-02-2021
44 வது சென்னை புத்தகக் காட்சியின் தொடக்க நாள் 24.02.2021 நிகழ்வாக நூறாண்டு கண்ட பதிப்பாளர் மற்றும் பதிப்பகத்திற்கு விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார் சென்னை பெருநகர் காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப., அவர்கள்.
நூறாண்டு கண்ட பதிப்பகங்கள்
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – இரத்தின நாயகர் & சன்ஸ்
நூறாண்டு கண்ட பதிப்பாளர்கள் விருதை பெற்றவர்கள்
திரு. சின்ன அண்ணாமலை – தமிழ்ப் பண்ணை
திரு. செ.மெ. பழனியப்ப செட்டியார் – பழனியப்பா பிரதர்ஸ்
திரு. பாரி செல்லப்பனார் – பாரி நிலையம்
திரு. முல்லை முத்தையா – முல்லை பதிப்பகம்
பபாசி விருது பெற்றவர்கள்
சிறந்த பதிப்பாளருக்கான விருது பெறும் பதிப்பகம் – வசந்தா பிரசுரம்
சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்பகச் செம்மல் ச.மெய்யப்பன் விருது பெற்ற பதிப்பகம் – அனுராதா பப்ளிகேஷன்

சிறந்த பதிப்பாளருக்கான பதிப்புச் செம்மல் க.கணபதி விருது பெற்ற பதிப்பகம் – ராஜ்மோகன் பதிப்பகம்
சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது பெற்றவர் – கலைமாமணி ஆறு. அழகப்பன் அவர்கள்
சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருது பெற்றவர் – எழுத்தாளர் திரு. கோ.மா.கொ.இளங்கோ அவர்கள்
சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது பெற்றவர் – கவிஞர் சக்தி ஜோதி அவர்கள்
சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது பெற்றவர் – திரு. ஆத்மா கே.ரவி அவர்கள்.
இந்த நிகழ்வில் வரவேற்புரையை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் திரு. ஆர்.எஸ்.சண்முகம் அவர்களும்.
நன்றியுரையை பபாசியின் செயலாளர் திரு.எஸ்.கே.முருகன் அவர்களும் வழங்கினார்கள்.
மேலும் இந்த விழாவில் பபாசியின் பொருளாளர் திரு. ஆ. கோமதி நாயகம் அவர்களும், சங்கத்தின் மற்ற நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *