சென்னையில்  ஜெரிகேர் மருத்துவமனை துவக்க விழா

வயதானவர்களின்  உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க
சென்னையில்  ஜெரிகேர் மருத்துவமனை துவக்கம்

சென்னை, Nov 18:
மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது மற்றும் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. 2025ல் 15% மக்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்.  மருத்துவ றையில் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஆகிய காரணங்களினால் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கோவிட் 19 தொற்றுநோய் காலத்தில் வயதான மக்களுக்கு வழங்கப்படும் கவனிப்பின் குறைபாடுகள் குறித்து தெரிய வந்துள்ளது.
உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் வயதானவர்களுக்கு அதிக கவனிப்பு தேவை படுகிறது. வயதானவர்களின் மருத்துவ சிகிச்சைகளை  நிர்வகிப்பதில் மருத்துவ ஊழியர்களும் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.வயதானவர்களுக்கான சிறப்பு பிரத்யேக மருத்துவமனை அவசியம் என்பதை வயதானவர்களுக்கான மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் உணர்ந்து உள்ளனர்.
சென்னையில் வயதானவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான ப்ரத்யேகமாக ஜெரிகேர் மருத்துவமனை துவக்க பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக அனுபவம் வாய்ந்த வயதானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்  மருத்துவர்களால் இந்த மருத்துவமனை நிர்வகிக்கப்படுகிறது, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் குழு  வயதானவர்களுக்கு வரும் சிக்கலான நோய் அதற்குண்டான மருந்துகள் வழங்குவது மேம்பட்ட முறையில் நிர்வகிக்கறது . ஜெரிகேர் மருத்துவமனையில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க படுகிறது. இதனால் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலத்தை குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறோம்.

 

ஜெரிகேர் மருத்துவமனை சிறப்பு அம்சம் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் குழு, வயதானவர்களுக்கு ஏற்ப  சுற்றுப்புற சூழ்நிலை, வழுக்காத தரை, அக்கறையான செவிலியர்கள்.உயர்தர மருத்துவ உபகரணங்கள், 24 மணி நேர மருத்துவ சிகிச்சை, அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ், மருத்துவ மனையில் இருந்து வீட்டுக்கு சென்ற பிறகு தொடர் சிகிச்சை, நோயாளிகளின் இல்லத்திற்கு சென்று சிறப்பு சிகிச்சை. போன்ற அம்சங்களை கொண்டுள்ளது ஜெரி கேர் மருத்துவமனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *