செங்கல்பட்டு மாவட்டம்
பொன்மார் கிராமத்தில்
அருள்மிகு ஸ்ரீ
சக்திபுரீஸ்வரி சமேத சக்திபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்


https://youtu.be/H8hFe7dqNBM

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம்,
பொன்மார் கிராமத்தில் சுமார் 1520
ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ
சக்திபுரீஸ்வரி சமேத சக்திபுரீஸ்வரர் ஆலயத்தில்
23.06.2022 வியாழன் அன்று, நிகழும் சுபகிருது
வருடம் தசமி திதி, ரேவதி நட்சத்திரம், சித்தயோகம்
கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10:15 மணி
அளவில் சிம்ம லக்கினத்தில் அருள்மிகு ஸ்ரீ
சக்திபுரீஸ்வரி சமேத ஸ்ரீ சக்திபுரீஸ்வரர் மற்றும்
பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மகா
கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக
நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை, நந்தி,
சண்டிகேஸ்வரர் ஸ்தாபனம், விசேஷ உபசாரங்கள்,
தீர்த்த பிரசாதம் வழங்குதல், ஆச்சார்ய உற்சவம்,
யஜமான உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்
நடைபெற்றன. நண்பகல் 12.00 மணியளவில்
ஆலயத்தின் சார்பில் சிறப்பு அன்னதானம்
வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு
சிவன் அருள் பெற்றுச் சென்றனர்.

கும்பாபிஷேக விழாவுக்கான அனைத்து
ஏற்பாடுகளையும் ஆலய செயல் அலுவலர்
மா.அமுதா, ஸ்ரீ சக்திபுரீஸ்வரர் அறக்கட்டளை
தலைவர் S.நாராயணன், செயலாளர் R.துளசிங்கம்,
இணை செயலாளர் T.வெங்கடேசன், பொருளாளர்
P.J.ரத்னகுமார், ஆலோசகர் B.ஈஸ்வர மூர்த்தி
மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், 2வது வார்டு
உறுப்பினர் மாலதி கணபதி, ஆலய அர்ச்சகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *