இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் இன்று சென்னையில் வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள பல நலிந்த பத்திரிகையாளர்கள் மிகவும் கஷ்ட நிலையில் இருந்து வருவது அறிந்து  அவர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 4 வது கட்டமாக 25 பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் இன்று சென்னையில் வழங்கப்பட்டது. இச்சங்கத்தின் *மாநிலத் தலைவர் மோகன் தாரா இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஸ்பைடர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

ஏர்டெல் நிர்வாகி திரு.ராஜா* அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். புலனாய்வு செய்தியாளர் திரு.விமலேஸ்வரன் உட்பட பலர் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

மேலும் 5வது கட்டமாக வரும் வியாழக்கிழமை அன்று 25 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *